எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை மனுவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக தமிழக புயல் பாதிப்புகளை சரி செய்ய ரூ.1011 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (டிச.7) சென்னைக்கு வருகை தந்தார். அவருடன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வருகை தந்தனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்று, மழை வெள்ளச் சேதங்கள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
பின்னர், சென்னை,தலைமைச் செயலகத்தில்,முதல்வர் மு.க. ஸ்டாலின்,மத்திய பாதுதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடந்தத.
இந்த கூட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைத்திடவும், நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்திடவும், மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்திடவும், பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
‘மிக்ஜம்’ புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ. மீட்டர் பெய்து, மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது குறித்தும், குறிப்பாக வரலாறு காணாத வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 32 செ.மீ., சென்னை - பெருங்குடியில் 29 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த மாநிலத்தின் 20 அமைச்சர்களையும், 50-க்கும் மேற்பட்ட குடிமைப் பணி அலுவலர்களையும், காவல் பணி அலுவலர்களையும் நியமித்து, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வரும் விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதையும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றிலிருநது பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருவது தெரிவிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் விளக்கப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிறு வியாபாரிகள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்கமாக ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மிக்ஜம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்தும் தெரிவித்து,புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாடு அரசின் கோரிக்கையான இடைக்கால நிவாரணத் தொகையை விரைவில் வழங்கிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை விடுத்தார். முன்னதாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட உடனடியாக சென்னைக்கு வருகை தந்து வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டமைக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க்கு, முதல்வர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளை சீர்செய்வதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ரூ. 5,060 கோடி வழங்கிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 450 கோடி வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளேன். மத்திய அரசின் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வரவுள்ளது என்றார்.
இதன்பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டது அறிந்து பிரதமர் மோடி கவலையுற்றார். தமிழக மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்யும். பிரதமரிடம் நான் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து பேசி கண்காணிக்குமாறு கூறியிருக்கிறேன். ராணுவம், கடற்படை, தேசிய மீட்புப்படை என அனைத்துத் துறையினரும் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நானும் சென்னையில் ஆய்வு செய்த பின்னர், முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமரின் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி மட்டுமின்றி சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ. 561 கோடி நிதி வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-03-2025
16 Mar 2025 -
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்
16 Mar 2025சென்னை : எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் நேற்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.
-
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த டிராகன் விண்கலம்
16 Mar 2025வாஸிங்டன் : சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
-
ஹெல்மெட் அணியாமல் பயணம்: லாலு பிரசாத் மகனுக்கு அபராதம்
16 Mar 2025பாட்னா : லாலு பிரசாத் யாதவின் மகனுக்கு பீகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.
-
சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
16 Mar 2025சென்னை : பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பூமி திரும்பியதும் சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு
16 Mar 2025புளோரிடா : அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்.
-
அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை: அமைச்சர் சேகர்பாபு
16 Mar 2025சென்னை : விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவை : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
16 Mar 2025நாக்பூர் : முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
-
விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது : த.வெ.க. தலைவர் விஜய் காட்டமான அறிக்கை
16 Mar 2025சென்னை : இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
16 Mar 2025சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
-
மேசடோனியாவில் பயங்கர தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
16 Mar 2025கோக்கானி : தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந
-
முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு
16 Mar 2025சென்னை : பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
16 Mar 2025லாகூர் : ஜம்மு - காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 Mar 2025திருப்பத்தூர் : வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரி
-
கர்நாடகாவில் ரூ. 375 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 2 வெளிநாட்டு பெண்கள் கைது
16 Mar 2025மங்களூரு : கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
-
பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாதப் படை : 90 வீரர்கள் பலி?
16 Mar 2025இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை க
-
அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்: செங்கோட்டையன் பேச்சு
16 Mar 2025சென்னை : தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-03-2025
16 Mar 2025 -
வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு: ஐ.நா.சபை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
16 Mar 2025நியூயார்க் : வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்: நடிகை ரன்யா ராவ் கண்ணீர் கடிதம்
16 Mar 2025பெங்களூரு : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள
-
தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
16 Mar 2025சென்னை : இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பா
-
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
16 Mar 2025சென்னை : தமிழ்நாட்டு தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்
-
சிரியா: அடிக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 16 பேர் உயிரிழப்பு
16 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
16 Mar 2025விழுப்புரம் : செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
-
அலங்காநல்லூரில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலி
16 Mar 2025மதுரை : மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.