முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள கவர்னரை போல் தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்தார் கவர்னர் ரவி

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2024      தமிழகம்
Ravi-2024-02-12

சென்னை, கேரள கவர்னரை போல் தமிழக அரசின் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கவர்னர் ஆா்.என்.ரவியின் உரையுடன் நேற்று காலை தொடங்கியது. எனினும், கவரனர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கவரனர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை முடித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த 25-ம் தேதி கேரள சட்டப்பேரவையில் அம்மாநில கவரனர் முகமது ஆரிஃப் கான், மாநில அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையை படிக்காமல், கடைசி பத்தியை மட்டும் 2 நிமிடங்களில் படித்துவிட்டு அமர்ந்தார்.கேரள கவர்னரை தொடர்ந்து, தமிழக கவர்னரும் மாநில அரசின் கொள்கை உரையை புறக்கணித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே கவரனர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து