முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம், திருத்தணி, திருப்போரூர் கோவில்களில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Brahmotsava-Festival--2024-

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருப்போரூர் கந்தசாமிகோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். 

விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ம் தேதி தங்க ஹம்ச வாகனம், 20-ம் தேதி தங்க கிளி வாகனம், 21-ம் தேதி ரதம் உற்சவம், 23-ம் தேதி வெள்ளி ரத உற்சவம், 26-ம் தேதி காலை விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது. அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நேற்று மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமான் கேடய உலா உற்சவத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணம், 23-ம்  தேதி கதம்ப பொடி விழா, 24-ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன். மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன் சுரேஷ் பாபு, நாகன் செய்து வருகிறார்கள்.

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  21-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 

விழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் மாட வீதியில்  வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து