எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நான் எத்தனையோ முறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்பேரவையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்த தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறிவருவதையும் ஆக்கப்பூர்வமான பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக்காட்டி வருகிறேன்.
தமிழகம் முழுவதும் மூலை, முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊடகங்களும், நாளிதழ்களும் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
2021-ம் ஆண்டு 20.45 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 6,853 வழக்குகள் பதியப்பட்டதாகவும். 9,571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் தி.மு.க. அரசின் உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது? மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்று 2021-2022ம் ஆண்டு உள்துறை மானியக் கோரிக்கையில் நான் சட்டமன்றத்தில் பேசினேன்.
இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் 'ஆபரேஷன் கஞ்சா 0.1, 0.2, 0.3, 0.4' என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது.
இதற்கு காரணம், இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தி.மு.க.-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதாக அவ்வப்போது வரும் நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகளில் இருந்தே தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக, ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றும், இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.-வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளதும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தத் தலைமை நிர்வாகி, தி.மு.க. தலைமை குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம், தான் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்-அமைச்சரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மறைவு
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி காலமானதை தொடர்ந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்


