முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளவங்கோடு தொகுதி காலியானது: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டசபை செயலர் கடிதம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : விஜயதாரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி (விளவங்கோடு தொகுதி), நேற்று முன்தினம் திடீரென டெல்லியில் பா.ஜனதா கட்சி தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதாரணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

விஜயதாரணி எழுதியுள்ள கடிதத்தில், "நான் எனது தமிழக சட்டமன்ற உறுப்பினர் பதவியை பிப்ரவரி 24-ந் தேதி முதல் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே, நெல்லையில் நேற்று பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு, விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தெரிவித்தார். இந்த கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கிடைத்ததும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. எனவே, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என்றே தெரிகிறது. அவ்வாறு நடந்தால், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயதாரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து