முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகிறது

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க.வின் 100 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகிறது.

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2024 பார்லி., தேர்தலுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 100 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதிசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 100 பேர் கொண்ட பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக பா.ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து