முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து?

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      இந்தியா
Ambani 2024-03-02

Source: provided

அகமதாபாத் : முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பிரபலங்களுக்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவை முன்னிட்டு, குஜராத் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் ப்ரீ வெட்டிங் ஷுட் உள்ளிட்ட திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், உலக தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் வருகை தந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக ஜாம் நகர் நட்சத்திர பட்டாளங்களால் நிறைந்துள்ளது. இந்நிலையில் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு பத்து நாள்களுக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்காக மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக கூறி, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து