முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்துவீச காலதாமதம்: டெல்லி அணி கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

விசாகப்பட்டினம் : ஐ.பி.எல். தொடரில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் காலதாமதமாக பந்துவீசியதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

விசாகப்பட்டினத்தில்... 

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணி வெற்றி... 

இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தாலும் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் பண்ட்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதற்கு முன் சென்னைக்கு எதிரான போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து