முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி. முன்னணி வீரர்கள் விலகல்

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      விளையாட்டு
Maxwell 2023-11-08

Source: provided

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னெர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் ஆடி வருவதால் அந்த அணி மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் களம் இறங்குகிறது.

பாகிஸ்தான் அணி பாபர் ஆசம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்களான பின் ஆலென் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டாம் பிளெண்டல் மற்றும் ஆல்-ரவுண்டர் சாக் போல்க்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

___________________________________________________________

தண்டனைக்கான தடை நீட்டிப்பு

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து அப்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த சம்பத்குமார் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் டோனி வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை பதிவு செய்து அந்த பதில் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக டோனி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அப்போது தண்டனைக்கு எதிராக சம்பத்குமார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். பின்னர் சம்பத் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி ஏ.ஸ்.ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பத்குமாரின் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் மே 3-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து