முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கட்டிய கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      சினிமா
Raghava-Lawrence 2024-04-13

Source: provided

சென்னை : தனது தாய் ஷோபாவிற்காக சென்னையில் நடிகர் விஜய் கட்டியுள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்ற நடிகர் ராகவா லாரன்ஸ் அங்கு சாமி தரிசனம் செய்தார். 

நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவிற்காக சென்னை கொரட்டூரில் புதிதாக சாய்பாபா கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் ஷோபா சாமி தரிசனம் செய்யும் புகைப்படமும், கும்பாபிஷேகம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில், நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் நடிகர் லாரன்ஸ் நேற்று சென்றார். அப்போது கோவில் வாயிலில் வரவேற்ற சோபாவின் காலில் விழுந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசிர்வாதம் பெற்றார். 

பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, ஷோபா உடன் இருந்தார். கோவிலில் இருந்தபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சாமி தரிசனம் செய்த நடிகர் லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், அனைவருக்கும் வணக்கம், நண்பன் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் சுவாமி கோவிலை கட்டிய போது, எங்கள் கோவிலில் ஒரு பாடலை பாடி, தன் இருப்பை எங்களுக்கு அருளினார். இந்த கோவிலை கட்டிய நண்பன் விஜய்-க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நான் தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து