முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

சென்னை : தமிழகத்தில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நாளை 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. 

கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத்தை  பாதுகாக்கும் பொருட்டு 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் கொண்டு வரப்பட்டு. அமல்படுத்தப்படுகிறது 

மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த தடையை விதித்து வருகிறது. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் மற்றும் மே மாதமாகும்.  இந்த மாதத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால், மீன்வளத்துறை மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி,  இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் நாளை 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை அமலுக்கு வருகிறது. இந்த காலங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும், வல்லம், கட்டுமரம், பைபர் படகுகள்  உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், ஆழ்கடலுக்கு செல்ல அனுமதி முற்றிலும் மாறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த தடைக் காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும்.  இந்த தடை காலங்களில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன் விலையும் உயர்ந்தே தான் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து