முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று ராம நவமி ஆஸ்தானம்: நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. 

மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. 

இதையொட்டி இன்று மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை  (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

 திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து