Idhayam Matrimony

சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      விளையாட்டு
18-Ram-51

Source: provided

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விளையாடவில்லை... 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது இடது கை கட்டை விரலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.  காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரிச்சர்டு க்ளீசன்.. 

டெவான் கான்வேவுக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்டு க்ளீசன் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவரை ரூ. 50 லட்சத்துக்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.  ரிச்சர்டு க்ளீசன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். 36 வயதாகும் ரிச்சர்டு க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக ஆறு டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  இந்தியாவுக்கு எதிரான அவரது அறிமுக டி20 போட்டியில் ரோஹித் சர்மா,  விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை வீழ்த்தினார்.  வலது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் டி20 போட்டிகளில் இதுவரை 100க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 12 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 14 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 13 hours ago
View all comments

வாசகர் கருத்து