முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பிஆர்எஸ் கட்சி எம்.பி.,யும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர்.

இருவரும் திகார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கவிதாவின் ஜாமின் மனு மே 2ம் தேதி அன்று டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் கெஜ்ரிவால் மற்றும் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 7 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து