முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
Jagan-Mohan-Reddy 2023-06-0

ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு,  அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில்,  மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரத்தில் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

ஆந்திர முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் உள்ள புலிவந்துலா தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதையடுத்து அவரின் சார்பில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

அதில், ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என்றும் கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு 41 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  2022-23 ஆண்டில் அவரது வருமானம் ரூ.50 கோடி எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  அவரின் மனைவி பாரதி ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.176.30 கோடி எனவும் அவரிடம் ரூ.5.30 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், அவர்களுக்கு சரஸ்வதி சிமெண்ட்ஸ் மற்றும் சந்தூர் பவர்ஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகும் முன்பு அவர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயால் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அவற்றில் பெரும்பான்மையான வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து