முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதன்கிழமை, 15 மே 2024      இந்தியா
CCA 2024-05-15

Source: provided

புதுடில்லி : சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 300 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது.

இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2013 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்க வழி வகுக்கும்..

இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 300 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள், ஹிந்துகள் உள்ளிட்ட 300 பேருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. 300 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து