முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      உலகம்
Iran 2024-03-10

Source: provided

டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே வாகன தொடரின்போது ( கான்வாய்) ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெ லிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஈரான் நாட்டின் அரசு அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பனி மூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் பயணித்தஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதிபர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விபரம் கண்டறியப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து