முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்கள் அணி விவரங்களை அறிவித்துவிட்டன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பெயரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் ரிசர்வ் வீரர்களாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க், மேத் ஷார்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்; மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா. ரிசர்வ் வீரர்கள்; ஜேக் ப்ரேசர் மெக்கர்க், மேத் ஷார்ட்.

_______________________________________________

வாசிம் அக்ரம் கணிப்பு

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றில் நேற்று நடைபெற்ற  முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அகமதாபாத்தில் மோதின. இதே மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக பெங்களூரு அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக பரிசு கிடைக்கும். கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக நாக் அவுட் போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார். எனவே அவரைப் பொறுத்த வரை, நீங்கள் உடைமாற்றும் அறையில் பொறுமையுடன் இருக்க வேண்டும். தற்போதைக்கு நல்ல பார்மில் இல்லாதது அவருக்கும், ஆர்.சி.பி அணிக்கும் விரக்தியை கொடுக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்குத் தெரியும். குறிப்பாக மேக்ஸ்வெல் எந்தளவுக்கு போட்டி மிகுந்தவர், எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்பட விரும்புபவர் என்பது எனக்குத் தெரியும் என்றார்.

_______________________________________________

மும்பை அணிக்கு அட்வைஸ்

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முறை மோசமாக விளையாடி 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, லீக் சுற்றிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமனம் செய்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 

அப்போது அவர் பேசியதாவது.,  “நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அணி நிர்வாகம் சிறப்பானதுதான், ஆனால் அவர்களின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தை யோசித்து ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் தேர்வு செய்தது. கேப்டன் விளையாடுவதும், அணியின் மற்ற வீரர்கள் விளையாடுவதிலும் வேறுபாடு தெரிந்தது. ஹர்திக் பாண்டியாவை இந்த நேரத்தில் கேப்டனாக நியமித்தது சரியில்லை என நினைக்கிறேன். ஓராண்டுக்கு பிறகு நியமித்திருக்கலாம். இது ஹர்திக் பாண்டியாவின் தவறில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாகதான் செயல்பட்டார். மும்பை அணி ஒற்றுமையுடன் விளையாடவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களா என்பதை மூத்த வீரர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து