Idhayam Matrimony

மே மாத விடுமுறை: வரும் 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
Vandalur-Zoo-2023-06-22

Source: provided

சென்னை : மே மாத விடுமுறையை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வருகிற 28-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.  இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பராமரிப்பு பணிக்காக பூங்காவிற்கு விடுமுறை விடுவது வழக்கம். இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பதற்காக வருகிற 28-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து