எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசானனை எதிர்கொண்டார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 13-21 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து அடுத்த இரு சுற்றுகளை 21-16, 21-12 என கைப்பற்றியதுடன், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
_______________________________________________
தினேஷின் புதிய அவதாரம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார். தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________
ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியும், அைதராபாத் அணியும் மோதிகொண்டன. இதில் ராஜஸ்தான் அணியை விழித்தி இறுதி போட்டிக்கு அைதராபாத் அணி தகுதி பெற்றது. இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குவாலிபயர் முடியும் முன்பே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று, கொல்கத்தாவும், அைதராபாத் அணியும் களம் காண்பது போல வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, குவாலிபயர் போட்டிக்காக முதல் நுழைவாயிலில் ஐதராபாத், கொல்கட்டா அணிகள் பேனர்களும் மற்றொரு நுழைவாயிலில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளின் பேனரும் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி சுற்றுக்கும், இறுதிப் போட்டிக்கும் இடையே ஒரே நாள் இடைவேளை உள்ளதால் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறிய நான்கு அணி பேனர்களும் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
_______________________________________________
வாக்களித்தார் எம்.எஸ்.டோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் சனிக்கிழமை வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் உடன் இருந்தார். மக்களவைத் தேர்தலில் 6-ம் கட்டமாக ஜார்க்கண்டில் உள்ள கிரிதி, தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேசத்தில் 14, அரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________
சாஹலின் மோசமான சாதனை
ஐ.பி.எல். 2-வது தகுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் சாஅல் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் மூன்று சிக்ஸர்களை அடித்தனர். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு யுஸ்வேந்திரா சாஅல் சொந்தக்காரர் ஆனார். அவரது பந்துவீச்சில் மட்டும் 224 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பியூஷ் சாவ்லா. அவரது பந்துவீச்சில் 222 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா (206 சிக்ஸர்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (202 சிக்ஸர்கள்) உள்ளனர்.
_______________________________________________
ராஜஸ்தான் வீரருக்கு அபராதம்
சென்னையில் நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஷிம்ரன் அெட்மயருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அவர் ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


