முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Annamalai 2

Source: provided

சென்னை : சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் இன்று   நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று  (27-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அமிஞ்சிகரை அய்யாவு மகாலில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து