முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல்: ஜூன் 4-ல் வெற்றிக் கொடியேற்றி கருணாநிதி நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:-   

 கடந்த ஓராண்டு முழுவதும் சாதனை திட்டங்களாலும் மக்களுக்கு பயனளிக்கும் செயல்களாலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  நூற்றாண்டை கொண்டாடி இருக்கிறோம். ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பிறந்த நாளை தேர்தல் நடத்தி முறைகளை கவனத்தில் கொண்டு மக்கள் நலம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்ட கழகம் சார்பிலும், ஒன்றிய, நகர,பேரூர் கிளை கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். 

மக்கள் கூடும் இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு அனைத்து கொடிக்கம்பங்களிலும் கொடிகளை புதுப்பித்து கொடியேற்ற வேண்டும். இனிப்புகள் வழங்கி மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். 

தி.மு.க.வின் தோழமையில் புதிய இண்டியா உருவாகப் போவதை உள்ளுர உணர்ந்து அவர்கள் புலம்புவதை காணமுடிகிறது. ஜூன்-4 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றி கொடி ஏற்றுவோம். இண்டியாவின் வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காணிக்கையாகவும். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் அவரது நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம். ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றிக் கொடி ஏற்றி தன்னிகரில்லா தமிழின தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து