முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஏரிகளில் நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை - அதிகாரிகள் தகவல்

புதன்கிழமை, 29 மே 2024      தமிழகம்
Water-1 2024-05-29

Source: provided

சென்னை : சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47சதவீதம்  நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி,  புழல்,  சோழவரம்,  செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகை ஏரிகள் சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்து வருகின்றன.  இந்த ஏரிகளின் மொத்த நீா் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.  இதிலிருந்து சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காகவும், தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காகவும் தினமும் சுமாா் 1,000 மில்லியன் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் நீடிப்பதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் இருப்பு தொடா்ந்து சரிந்து வருகிறது.  இந்த நிலையில்,சென்னை குடிநீா் ஏரிகளில் மொத்த நீா் இருப்பு 5,556 மில்லியன் கன அடி அதாவது, 47.26சதவீதம்  மட்டுமே உள்ளது. சென்னைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி நீா் குடிநீருக்காக தேவைப்படுகிறது.  அதன்படி, தற்போது இருக்கும் நீரைக்கொண்டு இன்னும் 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து