முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் பா.ஜ.க. அரசு இன்று பொறுப்பேற்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவில் பா.ஜ.க. அரசு இன்று பொறுப்பேற்கிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், அங்கு ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து, ஆட்சியையும் பறிகொடுத்தது. இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது. நாளை ( ஜூன் 12ம் தேதி) மாலை 8 மணியளவில் ஜனதா மைதானத்தில் ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வராக மற்றும் மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பா.ஜ.க. தேர்வு குழுவை அமைத்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், புபேந்திர யாதவ் ஆகியோரை பா.ஜ.க. தலைமை நியமித்துள்ளது. 

ஒடிசா முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன்பு அம்மாநில தலைநகரில் ரோடு ஷோ நடத்துகிறார். இந்த ரோடு ஷோ ஜெயதேவ் விஹாரில் தொடங்கி புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா நடைபெறும் இடமான ஜனதா மைதானத்தில் முடிவடையும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமரை தவிர, பா.ஜ.க.வின் சில முதல்வர்கள் உள்பட பல கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து