முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.காங்கோவில் பயங்கரம்: படகு நீரில் மூழ்கி 86 பேர் பலி

புதன்கிழமை, 12 ஜூன் 2024      உலகம்
Bote 2023 08 13

Source: provided

கின்ஷாசா : டி.ஆர்.காங்கோவில் நதியில் படகு மூழ்கிய விபத்தில் 86 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தத்தளித்த 185 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடான டி.ஆர்.காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதிகளில் ஒன்றான குவா நதி பாய்கிறது. இந்த நதியில் மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது. முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் நதியில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் நதியில் மூழ்கினர்.

இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நதியில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்ளிட்ட 86 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 185 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலரைக் காணவில்லை. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்ற உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து