முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 21-ம் தேதி யோகா தின நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Modi 2023 07 30

ஸ்ரீநகர், காஷ்மீரில் வரும் 21-ம் தேதி நடைபெறும் யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று வரும் 21-ம்  தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ம்  தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10-வது சர்வதேச யோகா தினம், வருகிற 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

காஷ்மீரை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் செல்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து