முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூன் 2024      இந்தியா
Cong 2024-06-19

புது டெல்லி, நீட் தேர்வுக்கு எதிராக நாளை  காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

நடப்பாண்டு நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டு, கடந்த  4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன. 

 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 நீட் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.  அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். 

நீட் தேர்வில் நடைபெற்றுள்ள  முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மவுனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து