முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      இந்தியா
Mamata-1

Source: provided

கொல்கத்தா : மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.  

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1-ம் தேதி அமலாகிறது. இந்திய அரசியலமைப்பின் 348-வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த  18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 146 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம். எனவே இந்த மூன்று சட்டங்களையும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு  அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து