முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்ச்சி விஷ சாராய சம்பவம்: சட்டசபைக்கு கறுப்பு சட்டையில் வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
EPS 2024-06-21

சென்னை, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. மேலும், நேற்றைய கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அ.தி.மு.க. சார்பில் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். முன்னதாக, சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்புவது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் தனது அறையில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து