முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கொள்வது மிகவும் சிரமம்: உலகின் சிறந்த பவுளர் ரஷீத்கான்; இந்திய வீரர் சூர்யகுமார் புகழாரம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      விளையாட்டு
Suryakumar 2024-06-21

Source: provided

ஆண்டிகுவா : ஆப்கான் வீரர் ரஷீத் கான்தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

சூப்பர் 8 சுற்று...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

வெற்றி பெற்றால்...

தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீட்டிக்கும். தோல்வி கண்டால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

மிகவும் சிரமம்....

இந்நிலையில் ரஷீத் கான் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் இதை முன்பே கூறியிருக்கிறேன், திரும்பவும் கூட சொல்கிறேன். ரஷீத் கான் காற்றில் பந்து வீசும் போது அவரது பந்தை எதிர்கொள்வது மிகவும் சிரமம்.

தெளிவாக இருந்தேன்...

அதனால் அவருக்கு எதிராக என்ன மாதிரியான ஷாட்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பதில் தெளிவாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர். நீங்கள் அவரை ஆதிக்கம் செலுத்த முடிவெடுத்தால் அவருக்கு முன்னால் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து