முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வாதிகார ஆட்சியை நடத்த டொனால்டு டிரம்ப் விரும்புகிறார் : கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 10 ஜூலை 2024      உலகம்
Trump-Kamala 2024-07-10

Source: provided

வாஷிங்டன் : நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற டிரம்ப் விரும்புகிறார் என்று கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ம்  தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபைடன், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் டிரம்ப்பை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். லாஸ்வேகாசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலாஹாரிஸ் பேசியதாவது:-

டிரம்பின் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை உருவாக்கி, திட்டம் 2025 என்று அழைக்கிறார்கள். இது சமூகப் பாதுகாப்பைக் குறைக்கும் திட்டம். இதில் கருத்தடைக்கான அணுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது. 

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனப்பெருக்க சுதந்திரத்தின் மீதான டிரம்பின் முழு தாக்குதலாக இருக்கும். டிரம்ப்புக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார். 

ஆனால் நாங்கள் அதை நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், பெண்களை நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களின் சொந்த நலனில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. 

டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். எனது தாய் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். 

அவரது வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருந்தன.அவை தனது இரண்டு மகள்களை வளர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை ஆகும். எனது தாய் அவரது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல். 

இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். சில நாட்களாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. ஆனால் அதிபர் ஜோபைடனைப் பற்றி நாம் அறிந்த ஒன்று என்னவென்றால் அவர் ஒரு போராளி. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து