முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கிரிக்கெட் தொடர்: ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு

புதன்கிழமை, 10 ஜூலை 2024      விளையாட்டு
Rohit-Kohli-Bumra 2024-07-1

Source: provided

மும்பை : இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இருவருக்கும்... 

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடவுள்ளதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் எப்போதும் இடம்பெறுவார்கள். ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

10 போட்டிகளில்... 

சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முன்னதாக நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்கள் பயிற்சிபெற போதுமானதாக இருக்கும். அடுத்த சில மாதங்களுக்கு அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளார்கள். செப்டம்பர் - ஜனவரி இடைவெளியில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாண்டியா - ராகுல்...

செப்டம்பர் மற்றும் ஜனவரி மாத இடைவெளியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், இந்திய அணியை ஹார்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து