முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      இந்தியா
rain 2023-05-25

 மும்பை, மும்பையில் இன்று  மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கும் வேளையில், மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 மும்பையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. 

ஏற்கனவே, பெய்து வரும் மழை காரணமாக, மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் நவி மும்பையில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தானே மற்றும் ராய்காட் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து