எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
டாப் 8 நாடுகள்....
மினி உலக கோப்பை என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல் முறையாக 2025-ல் நடத்துகிறது. ஒருநாள் போட்டித் தர வரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூரில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு மறுப்பு...
தொடக்க ஆட்டம், அரை இறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப் போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரையிறுதி உள்பட 5 போட்டிகள், ராவல்பிண்டியிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பாதுகாப்பு கருதி மத்திய அரசு அனுமதி மறுப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்திய அரசுக்கு...
பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாட தயார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 19-ம் தேதி ஐ.சி.சி.யின் கூட்டம் கொழும்பில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட இந்திய அரசு அனுமதி மறுப்பதற்கு எழுத்துப்பூர்வ ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ-இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.
இலங்கையில்...
இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குவது கட்டாயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்து இலங்கையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


