முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டர் சட்டத்தில் கைது: சவுக்கு சங்கருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார்? போன்ற கேள்விகளை சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு எழுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என வாதங்களை முன்வைத்தார். அரசு தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிட்டதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த இடைக்கால ஜாமீன் உத்தரவு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கிற்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து