முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை குறித்து தற்போது காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : மேட்டூர் ஆணையை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      தமிழகம்
duraimurugan-2023-05-01

Source: provided

மேட்டூர் : மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை குறித்து தற்போது காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நேரில் ஆய்வு....

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம் தேதி எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையில் சனிக்கிழமை (ஆக 3) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேட்டூர் அணையின் 16 கண் பாலம், சுரங்க மின் நிலையம், அணைப் பூங்கா மற்றும் வலது கரை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அணையின் வலது கரைப் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் மலர்தூவி காவிரியை வணங்கினார்.

கட்ட விட மாட்டோம்....

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே கர்நாடகா அரசு திட்ட வரைவு தயாரித்து, காவிரி நடுவர் மன்றத்தில் வழங்கியது. ஆனால், காவிரி கீழ்பகுதி அரசின் அனுமதி பெற்றால் மட்டுமே அணை கட்ட முடியும் என்பதால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை, காவிரி திட்டத்தில் காவிரி நதி நீரை விடுவிப்பது குறித்து பேசியுள்ளது. மேகதாது அணை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது மேகதாது அணை குறித்து, காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகமாக உள்ளது. இது மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழகத்துக்கு பாதகமான செயலாக இருக்குமா? என்றால், அதற்கு பதில் ஆம் தான்.

எதிராக உள்ளது...

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது. மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்குப் போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேட்டூர் அணையின் உபரி நீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையும்கூட அதற்கு போதுமான அளவில் நிதி தேவைப்படுகிறது.

52 ஏரிகளில் நீரை... 

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உபரிநீர் திட்டத்தில் நூறு ஏரிகளை நிரப்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், 100 ஏரிகள் எங்கு இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தற்போது வரை 52 ஏரிகளில் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் காவிரியின் உபரி நீர் நிரப்பும் திட்டத்தை மேச்சேரி வரை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை....

தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும்” என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து