Idhayam Matrimony

ஜாமீன் கோரி கவிதா அப்பீல் மனு: சிபிஐ, அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kavitha 2024 08 11

Source: provided

புது டெல்லி : டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி கவிதாவின் மேல்முறையீடு மனு மீது சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கவிதா மேல்முறையீடு செய்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. அதன்படி, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தில்லி கலால் கொள்ளை 2021-22ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கவிதாவை கைது செய்தது.

இதனைத்தொடர்ந்து தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து