Idhayam Matrimony

தமிழகத்தில் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சிதான்: வைத்திலிங்கம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      தமிழகம்
Vaithilingam 2024-09-09

Source: provided

தஞ்சாவூர் : தமிழகத்தில் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சிதான் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தஞ்சையில் அவருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்களில் 100 சதவீதத்தில் 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும். 2026-ல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும்.

நாங்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும்.

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து