முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் டி.வி. நேரடி விவாதத்தில் நாற்காலியால் தாக்கிய மேயர் வேட்பாளர்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      உலகம்
Brazil 2024-03-18

பிரேசில்லா, பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்று கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியை கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ  வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

 16 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில், வேட்பாளரான பாப்லோ மார்கல் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்த போது, ஜோஸ் லூயிஸ் டேடெனா என்பவர் திடீரென நாற்காலியால் தாக்குகிறார். இதனை சற்றும் எதிர்பாராத பாப்லோ மார்கலுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது. இதனிடையே தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார். பின்னர் பாப்லோ மார்கல்  இல்லாமலே விவாதம் தொடர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து