முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டிரம்ப் விருப்பம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      உலகம்
Modi-Trump 2024-03-18

மிச்சிகன், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பயணத்தின் ஒரு பகுதியாக வரும் 23-ம் தேதி Summit of the Future என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐ.நா சபையில் உரையாற்றுகிறார். அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர் டிரம்ப், தன் மீதான இரண்டாவது படுகொலை முயற்சிக்குப் பின்னர் முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மிச்சிகன் மாகாணம் ப்ளின்ட் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில்,

இந்திய - அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா மிகப் பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இருந்தாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்க வரும் அவரை நான் சந்திப்பேன் எனக் கூறினார்.

இருப்பினும் இந்த சந்திப்பு பற்றி மேலதிக உறுதியான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரதமரின் பயணத் திட்டம் பற்றிய அறிவிப்பிலும் கூட இது குறித்து ஏதும் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து