முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய பட்டியல்: வங்காளதேச அணி சரிவு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

துபாய் : இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலில்  (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

புதிய பட்டியல்...

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற பின்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா (74.24 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது.

7வது இடத்திற்கு... 

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த வங்காளதேசம் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தப்பட்டியலில் 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (62.50 சதவீதம்), 3வது இடத்தில் இலங்கையும் (55.56 சதவீதம்) உள்ளன. 4 முதல் 6 இடங்களில் முறையே இங்கிலாந்து (42.19 சதவீதம்), தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), நியூசிலாந்து (37.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து