முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 90 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

சண்டிகர், அரியானாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.

அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக். 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.  

சட்டமன்ற தேர்தல் போட்டியை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) ஒரு கூட்டணியாகவும், இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. தவிர ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் காண்கின்றன.

அரியானாவில் விவசாயிகளின் பிரச்னை, வேலையின்மை, அக்னிவீரர் திட்டம், பணவீக்கம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் என எல்லா துறைகளிலும்  பிரச்சனை எழுந்துள்ளன. 

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.  நுஹ் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், வேலையின்மை பிரச்னை குறித்து மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து