முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
IndiGo-flights 2024-01-09

Source: provided

புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், தற்போது எங்கள் நெட்வொர்க் முழுவதும் தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இணையதளம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இண்டிகோ விமானப் பயணிகள் விமான நிலையங்களில் வருகைப் பிரிவில் நீண்ட வரிசைகளில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் விமானப் பயணிகளுக்கு சிறந்த உதவி மற்றும் ஆதரவை வழங்க எங்கள் விமான நிலைய ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இடைவிடாமல் உழைத்து வருகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்தில், வருகைப் பிரிவில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் நல்ல பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும் எங்கள் விமான நிலைய ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். இந்த நேரத்தில் உங்கள் பொறுமை மற்றும் நிலைமையை புரிந்துகொள்ளும் தன்மை போன்றவற்றை நாங்கள் உண்மையில் பாராட்டுகிறோம். எங்களுடன் இருப்பதற்கு நன்றி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் கணினிகளில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சரிபார்ப்பது மற்றும் விவரங்களை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், பயணிகள் நீண்ட தொலைவில் வரிசையில் நின்றிருக்கும் காட்சிகள் வெளியாகின.

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், எங்களது இணையதளத்தில் முன்பதிவு செய்வது உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமான நிலையத்தில் வருகை தரும் இண்டிகோ பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து