எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று கனடா நாட்டு தூதர்களை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் பின்னணியில், மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருப்பதாக கனடா அமைச்சர் கூறியிருந்தது அபத்தமானது மற்றும் அடிப்படையற்றது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் உத்தரவிட்டிருந்ததாக கனடா நாட்டு அமைச்சர் குற்றம்சாட்டியிருந்ததாக சர்வதேச ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் இந்தியா, புது தில்லியில் உள்ள கனடா நாட்டு தூதர்களை அழைத்து, தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக அமித் ஷா எடுக்கும் நடவடிக்கையால், நாட்டில் மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக கனடா நாட்டு வெளியுறவு விவகாரத் துறை இணை அமைச்சர் டேவிட் மோரிசன், கனடா நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாள ரந்தீர் ஜெய்ஸ்வால், கனடா அமைச்சரின் பேச்சுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டு தூதர்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


