முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      உலகம்
Kamala-Harris---Trump-2024-

Source: provided

வாஷிங்டன் : நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகி உள்ள புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை  அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 

அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார். 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து