முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      உலகம்
Indonesia-2024-11-29

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மேடான் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர். கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

வடக்கு சுமத்ரா பிராந்திய காவல்துறையின் போக்குவரத்து இயக்குனர் முஜி எடியன்டோ கூறுகையில், இந்தோனேசியாவின் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு இடையில் சில வாகனங்களில் மக்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற குறைந்தது 2 நாட்கள் ஆகும் என்றார். இந்த வார தொடக்கத்தில், வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் நான்கு இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து