முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் இன்று செல்ல திட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

லக்னோ : உ.பி.யில் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மற்ற 5 கட்சி எம்.பி.க்களுடன் நாளை சம்பலுக்கு  செல்லவுள்ளதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். அப்போது ராகுல் காந்தியுடன் உ.பி. பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே உடன் இருப்பார் என தெரிவித்தார். ராகுல் காந்தியுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு எம்பி பிரியங்கா காந்தியும் உடன் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து