முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

சென்னை, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர் கோவி.செழியன், உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உர்யகல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற கல்விப்பட்டறை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கோ.வி.செழியன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உயர்கல்வித்துறையில் பல்வேறு புதுமைகளை செய்து வருகின்றது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் வல்லமை படைத்த இளைஞர்களை உருவாக்குவது உயர்கல்வித்துறை.

இந்திய அளவில் உயர்கல்வி பெற்றவர்கள் 28 சதவீதம். 2030க்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பது இந்திய அரசின் எதிர்பார்ப்பு. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியில் திகழும் நமது தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் 47 சதவீதம் பேர். கல்வி கற்பதிலும், மாணவர்கள் கற்றுக்கொள்வதிலும் செயல்படுத்திவரும் திட்டத்தை மேம்படுத்துவதுதான் இந்த பயிலரங்கத்தின் நோக்கம்.

ஒவ்வொரு மாணவரும் அடையவேண்டிய திறன் என்ன என்பதை அறிஞர்கள் கணித்து, என்னென்ன உத்திகளை ஆசிரியர்கள் கையாண்டால் அந்த திறமைகளை மாணவர்களிடத்தில் உருவாக்க வேண்டும் என்பது குறித்தும், அதற்கான கற்றல் கற்பித்தல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுப்பதும், மாணவர்களுக்கு முறையான திறன்மேம்பாடு சென்றடைகின்றதா என்பதை வகுப்பதுதான் இந்த பயிலரங்கின்நோக்கம்.

மாணவர்கள் பல்வேறு உயரங்களை அடைவதற்கான திட்டங்களை இந்த பயிலரங்கம் மூலம் வகுத்து, அவற்றை பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளுக்கும் கொண்டு சேர்த்து செயல்படுத்த வேண்டும். உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உள்ளனர். நல்ல திட்டங்களை வழங்க அரசும் தயாராக உள்ளது, அரசும், பேராசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து