முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 500 பேர் கைது

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Tamilisai 2024-12-04

Source: provided

சென்னை: சென்னையில் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்றதாக தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். 

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மை யினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கிருஷ்ணகுமார், மனோகர், சாய் சத்யன், காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால்  ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதை தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன், கரு.நாகராஜன் உள்பட இந்து அமைப்பினர் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எழும்பூரில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து