முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை: மழை பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் தமிழக அரசு ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2024-12-13

Source: provided

சென்னை: தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரிய அளவுக்கு... 

சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. அதுதொடர்பாக, ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, அதை மேற்பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அதுதொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

செய்திகள் இல்லை...

தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. தென்காசி பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், திருநெல்வேலிக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று சென்னை பார்வையிட்டார். பின்னர், திருச்சியில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு வந்துள்ளார். மறுபடியும் அவரை திருநெல்வேலிக்கு செல்லுமாறு கூறியிருக்கிறேன்.

பெரிய அழுத்தமாக...

மத்திய அரசு தமிழகத்துக்கு பேரிடர் நிதி கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி ஊடகங்கள் தொடர்ந்து எழுதினால் அதுவே மத்திய அரசுக்கு பெரிய அழுத்தமாக இருக்கும். மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்துள்ள நிதி போதுமானது அல்ல. மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ள பகுதிகளில் ஏரிகள் திறந்துவிடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. கரையோரப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக சில இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படும். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

கடுமையாக எதிர்ப்போம்...

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இன்டியா கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். எங்களால் முடிந்தவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து